செப் 1, கன்னியாகுமரி
திருவட்டார்: கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டத்துக்குட்பட்ட எட்டாங்குன்று பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள், “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அந்தப் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்ற நிலையைப் பற்றி மாவட்ட ஆட்சித் தலைவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்து, பணிகள் தரமான முறையில் விரைவாக முடிக்க தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.
உடன், பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி நகர நிருபர் செலிஸ்
