திருநெல்வேலி,நவ.19:-
சுதந்திர போராட்ட வீரரும், ஆங்கிலேயரை எதிர்த்து கப்பலோட்டிய தமிழருமான வ. உ. சிதம்பரனாரின், 89- வது ஆண்டு “நினைவு” தினம் நேற்று (நவம்பர். 18) கடை பிடிக்கப்பட்டது.

இந்நாளையொட்டி, நெல்லை மாநகராட்சி எதிரே அமைந்துள்ள வ. உ. சி. மணிமண்டபத்தில் உள்ள,வ.உ.சி.யின் திருவுருவச்சிலைக்கு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். இரா. சுகுமார் தலைமையில், நேற்று (நவம்பர்.18) காலையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் {சபாநாயகர்} மு. அப்பாவு, “மலர் மாலை”அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
அவருடன், தமிழக முன்னாள் அமைச்சர் டிபிஎம் மைதீன்கான், பாளையஙகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப்,நெல்லை மாநகராட்சி மேயர் கோ. ராம கிருஷ்ணன், துணை மேயர் கே. ஆர். ராஜூ உட்பட பலர், கலந்து கொண்டனர்.
இந்த நிகழச்சியில் பேசிய சபாநாயகர், “சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து, அவர்களை போற்றிப்புகழும், நன்றியுள்ள சிறந்த அரசாக, தமிழ்நாடு அரசு திகழுகிறது!”- என்று, பாராட்டினார்.
முன்னதாக, பணகுடி பேருந்து நிலையத்தில், அலஙகரித்து வைக்கப்பட்டிருந்த வ.உ.சி. யின் திருவுருவப்படத்திற்கு, சபாநாயகர், “மலர்மாலை” அணிவித்து “மரியாதை” செய்தார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: “மேலப்பாளையம்” ஹஸன்
