செப் 16, கன்னியாகுமரி –
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகம் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகளையும், மீனவ சமுதாய மக்களையும் ஈர்த்துவரும் முக்கிய இடமாக விளங்குகிறது. குறிப்பாக விடுமுறை நாட்களில் குடும்பத்தினர் பெருமளவில் வருகை தருகின்றனர்.
ஆனால், இங்கு இரவு நேரங்களில் துறைமுக வளாகத்தில் உள்ள மின்விளக்குகள் எரியாமல் இருப்பதால் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள், பாதுகாப்பின்மை காரணமாக அச்சத்துடன் வருகை தரும் நிலை உருவாகியுள்ளது.
“இரவு நேரங்களில் துறைமுகம் இருள் சூழ்ந்ததால், மக்கள் நிம்மதியாக சுற்றி வர முடியாமல் இருக்கின்றனர்.
பாதுகாப்பு சிக்கல் அதிகமாக இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மின்விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலை தொடர்ந்தால் சுற்றுலா பயணிகள் வருகை குறையக்கூடும் என அங்குள்ளவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
குமரி மாவட்ட செய்தியாளர் – பாவலர் ரியாஸ்.
