Headlines

படங்குனி திருவிழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

படங்குனி திருவிழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு அருள்மிகு அழகுநாச்சியம்மன் திருக்கோயிலில் அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன் அவர்கள் தலைமையில், உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி, பொன்னுச்சாமி , அழகிரிசாமி, பழனிச்சாமி , ஊர் பெரியதனக்காரர்கள் சண்முகம் , செல்லப்பாண்டியன், பெரியசாமி, அழகிரிசாமி, செல்வகுமார் ஆகியோர் முன்னிலையில் இன்று 06.02.2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் திருக்கோயில் வளாகத்தில் கூட்டம் நடைபெற்றது.

சித்திரை மாதம் படங்குனி திருவிழா நடத்துவது தொடர்பாகவும், திருவிழாவிற்கு பொதுமக்கள் பங்களிப்பு நிதி வழங்குவதும் , திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான சாமி சப்பாரத்தில் திருவீதியுலா வருவது, மண்டப படி அமைப்பது என பல்வேறு நிகழ்வுகளுக்கு விழா கமிட்டி அமைத்து திருவிழாவை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஐந்து சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன‌. விரைவில் ஊர் பொதுக்கூட்டம் பொது சாவடியில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்பதாகவும் அந்த கூட்டத்தின் முடிவில் இறுதி அறிவிப்பு வெளியிடப்படும் என்பதாக நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர். கூட்டத்தில் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சுரேஷ் ( எ ) பொன்முத்துலிங்கம் , முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மகாலட்சுமி பெரியசாமி , முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் கே.கே.ரவி உள்ளிட்ட சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *