உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள கார் பார்க்கிங் அமைந்துள்ள 600 வருடங்கள் பழமையான ஜெயில் காளியம்மன் கோவிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானங்கள் நடைபெற்றது.
பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் ஜெயில் காளியம்மன் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இந்த சிறப்பு பூஜைக்கு சிறப்பு விருந்தினராக மதுரை ஆதீனம் கலந்து கொண்டார்.

இந்த அன்னதான விழாவிற்கு ஜெயக்குமார் மதுரை மாவட்ட இந்து முன்னணி வியாபாரிகள் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
மேலும் சோலை கண்ணன், ராஜா ,குமார் ,சரவணன், செல்வகுமார் உட்பட வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர் இந்து அன்னதான விழாவில் 500 க்கும் மேற்பட்டோர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி.
