பழனியருகே அ. கலையம்புத்தூர் கிராம நிர்வாக அலுவலகம் மேற்கூரை மிகவும் சேதம் அடைந்து உள்ளது. இதனால் புகார் கொடுக்க வரும் பொதுமக்களுக்கும் கிராம நிர்வாக அலுவலர் அவர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் எந்த நேரத்தில் மேற்கூரையில் உள்ள ஓடுகள் உடைந்து மேலே விழும் என்ற உயிர் பயத்தின் அச்சத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை.