Headlines

திருநெல்வேலியில் நடைபெற்ற, இல்லக் குழந்தைகளுக்கான உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல்கள் குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சி! மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.சுகுமார், துவக்கி வைத்தார்!

திருநெல்வேலியில் நடைபெற்ற, இல்லக் குழந்தைகளுக்கான உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல்கள் குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சி! மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.சுகுமார், துவக்கி வைத்தார்!

திருநெல்வேலி,பிப்.22:- நெல்லை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக, திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியிலுள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இல்லக் குழந்தைகளுக்கான உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல்கள் குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சி, இன்று [பிப்.22] நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.சுகுமார், துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- “திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலமாக, இல்லக் குழந்தைகள் மற்றும் 2019-ஆம் ஆண்டு நிகழ்ந்த “கொரனா” தொற்று காரணமாக பெற்றோர் அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகள் என, சுமார் 1500 பேர் கல்வி பயின்று வருகின்றனர்.

இவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும், மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டு வருகின்றன. இவர்களின் கல்வி நலன்களை கருத்திற்கொண்டு, பல்வேறு சிறப்புப் பயிற்சி வகுப்புகள், அவ்வப்போது நடத்தப்படுகின்றன. இது போன்ற நல்ல வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொண்டு பொருளாதார ரீதியாக, முன்னேற வேண்டும்!- – இவ்வாறு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் .இரா. சுகுமார், குறிப்பிட்டார். இன்றைய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் உதவி இயக்குநர் ஜார்ஜ் பிராங்கிளின், நீதிக்குழுமம் உறுப்பினர் ஆரோக்கிய மேரி, வேலைவாய்ப்பு அலுவலகம் உதவி இயக்குநர் மரிய சகாய ஆண்டனி, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் டாக்டர் சர்மிளா, அரசு பொறியியற் கல்லூரி பேராசிரியர் முகம்மது யூனுஸ், அரசு சித்த மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் முகிலன், பாளையங்கோட்டை சாரா டக்கர் பெண்கள் கல்லூரி பேராசிரியை ஜெய் ரூபி, அரசு செவிலியர் கல்லூரி ஆசிரியர் செல்வன், இந்திய சாலை போக்குவரத்து துறை [I.R.T] தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர் காசி விசுவநாதன் ஆகியோர், தனித்தனி தலைப்புகளில் பேசி, விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, விழிப்புணர்வு பயிற்சி பெற்ற அனைவருக்கும், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், விலையில்லா கல்வி உபகரணங்களை வழங்கி, வாழ்த்தினார். இந்த நிகழ்வுகள் அனைத்திலும், திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக முதல்வர் செண்பக விநாயக மூர்த்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் அருட்செல்வி ஆகியோரும், பங்கேற்றிருந்தனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *