அக்.3:-திருநெல்வேலி
கிழக்கு மாவட்டம், ராதாபுரம் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட, பணகுடி அருகே உள்ள “லெப்பை குடியிருப்பு” கிராமத்திற்கு செல்லும் ரெயில்வே பாதையானது, தற்போது புதிதாக சுரங்கப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சுரங்கப்பாதையை, ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவருமான மு. அப்பாவு, இன்று (அக்டோபர். 3) காலையில், ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, மக்களின் பயன்பாட்டுக்கு, அர்ப்பணித்தார்.

கடந்த ஒரு வருடமாக, இந்த ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள், இடைவெளியின்றி நடைபெற்று வந்த நிலையில், சபாநாயகரின் தொடர் முயற்சியால், பணிகள் இன்னும் கூடுதலாக விரைவுபடுத்தப்பட்டு, அவை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இந்த சுரங்கப்பாதை, இன்று திறக்கப்பட்டது! என்பது, குறிப்பிடத்தக்கதாகும். தானியங்கி முறையில், மழைநீர் வெளியேறுவதற்கு, அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம், வழி செய்யப் பட்டுள்ளது.
சுரங்கப்பாதை திறப்பு விழா நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர்,நெல்லை கிழக்கு மாவட்ட, திமுக மாணவர் அணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு, பணகுடி பேரூராட்சி மன்றத்தலைவி தனலட்சுமி தமிழ்வாணன், மாவட்ட கவுன்சிலர் சாந்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் தாய் செல்வி, கோசிஜின், காவல் கிணறு ஊராட்சிமன்றத் தலைவி இந்திரா சம்பு, திமுக சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அழகேசன், நெல்லை கிழக்கு மாவட்ட திமுக விவசாய பிரிவு துணை அமைப்பாளர் தம்பி ராஜ், பணகுடி நகர திமுக செயலாளர் தமிழ்வாணன்,பணகுடி பேரூராட்சி மன்றத் துணைத்தலைவர் புஷ்பராஜ், அறங்காவலர் குழு தலைவர் இசக்கியப்பன், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் விஷ்ணு குமார், மின்வாரிய செயற்பொறியாளர் ஜெகதீஷ் மற்றும் ஊர்மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
