மக்கள் முதல்வரின் பொற்கால ஆட்சியை கொண்டாடும் வகையில் கோவையில் களைகட்டிய ‘திராவிடப் பொங்கல் விழா’ – விளையாட்டுப் போட்டிகளுடன் ஆரம்பம் .
தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்தி, “எல்லோருக்கும் எல்லாம்” என்கிற உன்னத நோக்கில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்டம் விளையாட்டு போட்டிகளுடன் களைகட்டியது.
கோவை மாநகர் மாவட்டம், கெம்பட்டி பகுதி, 80-வது வார்டில் கழகத்தின் சார்பில் ‘திராவிடப் பொங்கல் திருவிழா’ மற்றும் விளையாட்டுப் போட்டிகள் வெகு விமரிசையாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றன.
கெம்பட்டி பகுதி பொறுப்பாளர் என்.ஜே. முருகேசன் , வார்டு செயலாளர், நா.தங்கவேலன் ஆகியோர் தலைமையில் இளைஞர்களின் ஆற்றலை ஊக்கப்படுத்தும் வகையில் விளையாட்டுப் போட்டிகளை கோவை மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் துரை. செந்தமிழ்செல்வன் அவர்கள் உற்சாகத்துடன் துவக்கி வைத்தார்.
மேலும், மகளிர் மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் நம் கழக ஆட்சியின் அடையாளமாக, மகளிருக்கான பிரம்மாண்ட ஓட்டப்பந்தயப் போட்டியை, 80-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், கோவை மாநகராட்சி பொது சுகாதாரக் குழுத் தலைவரும், கோவை மாநகர் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளருமான பெ.மாரிசெல்வன் அவர்கள் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
சாதி மத பேதமற்ற சமத்துவப் பொங்கலாக நடைபெற்ற, இவ்விழாவில், கழகத்தின் மூத்த முன்னோடிகள் , கழக உடன்பிறப்புகள், இளைஞரணி, மகளிரணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு, திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பை கொண்டாடி மகிழ்ந்தனர்.
“எல்லோருக்கும் எல்லாம் இதுவே எங்கள் – திராவிட மாடல்” “தமிழர் திருநாளில் தமிழினக் காவலரை” வாழ்த்தி வணங்குவோம் இஎன்று பாராட்டி மகிழ்ந்தனர்.
கோவை மாவட்ட செய்தியாளர் :சம்பத்குமார்
