திருநெல்வேலி,நவ.15:-
“புரட்சி பாரதம்” கட்சியின், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் ஏ.கே.நெல்சன், இன்று [நவ.15] திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியிலுள்ள, நெல்லை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை, சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- “திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், சரியாக செயல்படவில்லை. பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில், இந்த நிர்வாகம் அடிப்படை வசதிகள் எதனையும் செய்து தரவில்லை. இது குறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம், ஆய்வு மேற்கொள்ள வேண்டும்! நஞ்சை நிலங்களில், வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ள, சேரன்மகாதேவி பேரூராட்சி செயல் அலுவலர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! அதுபோல, முறைகேடாக பட்டா வழங்கியுள்ள, சேரன்மகாதேவி வருவாய்துறையினர் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும்! – இவ்வாறு, “புரட்சி பாரதம்” கட்சியின், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் ஏ.கே. நெல்சன், கூறினர். இந்த பேட்டியின் போது, தமிழக மக்கள் முன்னேற்றக்கழக மாநகர் மாவட்ட செயலாளர் துரைப்பாண்டியன், இளைஞர் அணி செயலாளர் முத்துப்பாண்டி, ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் கலைக்கண்ணன், புரட்சி பாரதம் கட்சியின், திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர், உடனிருந்தனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.