மாண்புமிகு தமிழக முதல்வர். மு.க.ஸ்டாலின்” அவர்கள் அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் மாணவ மாணவியர்களின் தலைமைப் பண்பினை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் சட்டமன்ற பட்ஜெட்க் கூட்டத் தொடரில் வெளியிட்ட அறிவிப்பின் படி நவம்பர் 14ம் நாள் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு பள்ளியிலும் ” மகிழ்முற்றம் ” துவங்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு இணங்க கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நவம்பர் 14 அன்று மகிழ் முற்றம் அமைப்பானது பள்ளியின் தலைமையாசிரியை பிரேமலதா அவர்களின் சீரிய முயற்சியால் சிறப்புடன் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திவான் சரிபா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். உறுப்பினர் ஹபிபுல்லா குழந்தைகளுக்கு தம் சொந்த செலவில் இனிப்பு வழங்கினார். மேலும் பள்ளியில் பயிலும் மொத்தமுள்ள 2510 மாணவியர்கள் ஐந்து குழுக்களாக எமிஸ் (EMIS) இணைய தளத்தால் பிரிக்கப்பட்டு தமிழர்களின் சங்க கால வாழ்வியல் படி அமைந்த ஐவகை நிலத்தின் பெயரால் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து குழுக்கள் உருவாக்கப்பட்டன . ‘ஒவ்வொரு குழுவிற்கும் 2 ஹவுஸ் கேப்படன் வீதம் மொத்தம் 10 ஹவுஸ் கேப்டன்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர். விவரம் வருமாறு .
குறிஞ்சி அணிக்கு: வெ.ஜோதிகா மற்றும் சி. சக்திமீனா முல்லை அணிக்கு இ.தங்கவர்ஷினி மற்றும் மூ. பிரியதர்ஷினி மருதம் அணிக்கு மூ.துர்கா தேவி ஸ்ரீ மற்றும் கு.லீலா தேவி நெய்தல் அணிக்கு மா. இசச்சியம்மாள் மற்றும் ச .மனீஷா பாலை அணிக்கு சு.உமா மகேஸ்வரி மற்றும் மா ,ப்ரீத்தி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
ஒவ்வொரு வகுப்பு மற்றும் வகுப்பின் பிரிவுக்கு ஏற்ப 52 வகுப்பளவிலான தலைவர்கள் (ஹவுஸ் லீடர் | குழுவுக்கு 52 வீதம் 260 வரவுஸ் லீடர்ஸ் தேர்ந் தெடுக்கப் பட்டுள்ளனர்.
அவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறை மற்றும் விதமாக ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு வழிகாட்டி ஆசிரியர் ஹவுஸ் தலைமை டீச்சர் வீதம் 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு (குறிஞ்சி அணி ஹச் ஹச்டி . தேவி , முல்லை அணி ஹச் ஹச்டி. அருள் கனி மருதம் அணி ஹச் ஹச்டி சண்முக சுந்தர பாண்டியன் , நெய்தல் அணி ஹச் ஹச்டி மகா செல்வி , பாலை ஹச் ஹச்டி
லதா மேரி ) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாணவர் குழுவுக்கான பொறுப்பு ஆசிரியராக இரா. முத்துசாமி அவர்களும் ஏனைய ஆசிரியர்கள் ஒவ்வொரு குழுவிற்கும் வழிகாட்டி ஆசிரியர்களாக குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழக முதல்வரின் கனவுதிட்டமான “மகிழ் முற்றம், மூலம் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் களிடையே
பாடம் சார்ந்த செயல்பாடுகள் , இணை செயல்பாடுகள், காலந்தவறாமை , வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்பு, தனி நபர் ஒழுக்கம், போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வம், கலைத்திருவிழாவில் பங்கேற்பு, தன் சுத்தம், வகுப்பறைச் சுத்தம், நட்புறவு, போன்ற பிரிவுகளின் வழியே மதிப்பீடு வழங்கப்பட்டு, அதிகப் புள்ளிகளைப் பெறும் அணியினருக்கு பாராட்டும்.. அதிகப் புள்ளிகளைப் பெறும் அணியின் வண்ணக்கொடி அந்த மாதம் முழுதும் பறக்கவிடப்பட்டு மாணவியர்களின் நேர்மறை சிந்தனைகளை ஊக்குவிக்கப்படுவதுடன் ஆளுமைத்திறன் அதிகரிப்பதன் மூலம் மாணவியர்களிடையே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி ஆளுமைத் திறனை ஊக்குவிக்கும் என கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கருதுகின்றனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம்.