வாணியம்பாடி,நவ.8- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் ரூபாய் 42.39 லட்சம் செலவில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டது.
இதனை சென்னையில் இருந்து காணொளி மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து நகர மன்ற தலைவர் உமா சிவாஜிகணேசன் குத்து விளக்கு ஏற்றி பள்ளி வகுப்பறை கட்டிடங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
நிகழ்ச்சியில் நகர திமுக செயலாளரும், நகரமன்ற உறுப்பினருமான வி. எஸ்.சாரதி குமார், நகராட்சி ஆணையாளர் முஸ்தபா,பொறியாளர் ராஜேந்திரன், நகர திமுக துணை செயலாளர் கே.தென்னரசு, நகர மன்ற உறுப்பினர்கள் பானுப்பிரியா வெங்கடேசன், ரஜினி, பிரகாஷ், ஷாஹீன் பேகம் சலீம், உள்ளாட்சி பிரதிநிதிகள், நகராட்சி பணியாளர்கள் என பலர் கலந்து
கொண்டனர்.
நிருபர்
அப்சர் மர்வான்
திருப்பத்தூர் மாவட்டம்