திருநெல்வேலி மேலப்பாளையம் ஞானியார் அப்பா பெரிய தெரு-சின்ன தெரு மேற்கே, பாளையங்கால்வாய் மேற்பக்கம் அமைந்துள்ள, “ஞானமாமேதை” செய்யது அப்துற் றஹ்மான் ஐதரூஸ் பூக்கோயா தங்கள் ஒலியுல்லாவின், 163-வது ஆண்டு நினைவு நிகழ்ச்சியான, 2 நாட்கள் “கந்தூரி” பெருவிழா, தர்ஹா வளாகத்தில் இன்று [ஜனவரி.14] இஸ்லாமிய ஆண்டு ஹிஜிரி 1446, ரஜப் பிறை14-வது மாலையில் கொடி ஏற்றத்துடன் , வெகுவிமரிசையாக தொடங்கியது. முன்னதாக காலையில், புனித ரவ்ழாவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றன.

மாலையில், மேளதாளங்கள், தாயிரா பாடல்கள், அலங்கார சிலம்பாட்டம் மற்றும் வான வேடிக்கைகள் ஆகியவற்றுடன், கொடி ஊர்வலம் புறப்பட்டு, எட்டு தெருக்கள் வழியாக சுற்றி, இரவில் தர்ஹாவை வந்தடைந்ததும், பக்த கோடிகள் முன்னிலையில், தர்கா கொடிமேடையில், புனிதக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. சிறப்பு “துஆ” ஓதப்பட்டு, அனைவருக்கும் “நேர்ச்சை” விநியோகிக்கப்பட்டதை தொடர்ந்து, “கந்தூரி விழா” நிறைவு பெற்றது. கந்தூரி விழாவிற்கான, அனைத்து ஏற்பாடுகளையும், அக்தார் கலீபா அப்துல் ரஹ்மான் தலைமையில், முஹீப்பீன்கள், ஜமாத்தார்கள் ஆகியோர், மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.