Headlines

ரம்ஜான் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

ரம்ஜான் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது

தென்காசி மார்ச் – 31

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் 110 வருட பழமையான மஸ்ஜித் துன்நூர் ஜூம்மா பள்ளிவாசல் செயல்பட்டு வருகிறது இது இந்த பகுதியில் உள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் ஆகும் இந்த பள்ளி யினை சுற்றி சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த பள்ளியில் நிர்வாகத்தினர் சார்பாக பெருநாள் தொழுகைக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இந்த தொழுகையில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டனர் இந்த சிறப்பு தொழுகை ஆனது காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு 9:00 மணிக்கு முடிவுற்றது சிறப்பு தொழுகையை இந்த பள்ளியின் தலைமை இமாம் அபூபக்கர் சித்திக் பைஜி நடத்தினார் சிறப்பு துவா ஓதப்பட்டு தொழுகை நிறைவுற்றது.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைவர் முகைதீன் பிச்சை (எ) முதலாளி துணைத் தலைவர் அக்பர் பாதுஷா செயலாளர் திவான் அகமது ஷா துணைச் செயலாளர் முகமது மைதீன் பொருளாளர் காதர் மைதீன் உட்பட ஏராளமான இஸ்லாமியர்கள் இளைஞர்கள் பெண்கள் குழந்தைகள் கலந்து கொண்டனர் முடிவில் பெருநாளின் வாழ்த்துக்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறி ஆரத் தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *