தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையினால் பொதுமக்களை காப்பாற்றும் வண்ணம் தயார் நிலையில் உள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவை பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ ஆர் ராமச்சந்திரன் கண்காணிப்பு அலுவலர் சங்கர் மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிக் செங்கோட்டை முன்னாள் நகர்மன்ற தலைவர் ரஹீம் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி ஆகியோருடன் பார்வையிட்டார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் வீராசிகாமணி கிராமத்தில் வருவாய் மற்றும் பெயரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு.கே. கே. எஸ்.எஸ். ராமச்சந்திரன் அவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலப் பகுதியில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள் உடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.சங்கர் இ.ஆ. ப அவர்கள் உடன் தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு. ஏ. கே. கமல் கிஷோர் இ.ஆ. ப தென்காசி சட்டமன்ற உறுப்பினர் திரு.பழனி நாடார் அவர்கள் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராஜா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசியல் முக்கிய பிரமுகர்கள் அரசு அதிகாரிகள் உடன் இருந்தார்கள்.