திருப்பரங்குன்றம் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் மருது பாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தொகுதி முழுவதும் பல்வேறு மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதையொட்டி பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட அன்னதான நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. பெண்கள், இளைஞர்கள், முதியோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் நிகழ்ச்சியில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மருது பாண்டியன், “மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடு தளபதி விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அனைத்தையும் பெற்ற நிலையிலும், ரசிகர்களின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை மதித்து, அவர்களுக்கு கட்சியில் பொறுப்புகளை வழங்கி அழகு பார்க்கும் தலைவர் தளபதி விஜய்” என்று தவெக கட்சித் தொண்டர்களுக்கு கிடைத்த தளபதி போன்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களைப் போன்றும் எந்தக் கட்சியினருக்கும் தொண்டர்களுக்கு கிடைக்கவில்லை பேரன்பு கொண்ட தலைவர்கள்
தொடர்ந்து அவர் பேசுகையில், ரசிகர்களாக இருந்த காலத்திலேயே தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக பொய் வழக்குகள் உள்ளிட்ட இடையூறுகள் ஏற்பட்டதாகவும், இன்றும் ஆளும் தரப்பு பல்வேறு அழுத்தங்களை கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். “அனைத்தையும் தாண்டி நாம் இன்று 2026-ல் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளோம். யாருக்காகவும் பயப்பட தேவையில்லை என்று தளபதி கூறியுள்ளார்” என்றார்.
மேலும், “இளைஞர்களின் 90 சதவீத வாக்குகள் தமிழக வெற்றிக் கழகத்துக்கே கிடைக்கும். குறிப்பாக தாய்மார்களின் முழுமையான ஆதரவும் நமக்கே” என்று கூறிய அவர், பொதுமக்கள் எதிர்கொள்ளும் எந்த பிரச்சனையையும் கட்சியிடம் தெரிவித்தால் தீர்வு காண்பது நமது கடமை என உறுதியளித்தார்.
வரும் மூன்று மாதங்கள் ஒவ்வொரு தொண்டரும் தன்னலம் பாராது முழு மனதோடு களத்தில் உழைக்க வேண்டும் என்றும், அந்த உழைப்பின் பலனாக தளபதி விஜய்க்கு அவர்களுக்கு வெற்றியை பரிசாக அளிப்பதே நமது கடமை என்றும் வலியுறுத்தினார். கிராமப்புறங்களில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்வாக்கு இல்லை என்ற விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய இடம் தேர்தல் களமே என்றும், திருப்பரங்குன்றம் தொகுதியில் பெரும்பான்மை பெற்று கிராமப்புறங்களில் அதிக வாக்குகளைப் பெற தொடர்ந்து களப்பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அனைத்து தொண்டர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என தெரிவித்த மருது பாண்டியன், “திருப்பரங்குன்றம் தொகுதியில் பெண்கள் பெரும்பாலும் தளபதி விஜய் பக்கம் உறுதியாக உள்ளனர். இந்த ஆதரவே நமக்கு மிகப்பெரிய பலம்” என்றார்.
இறுதியாக, “வருகிற புத்தாண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு. அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்; வெற்றியை நமதாக்கி தளபதி அவர்களுக்கு அர்ப்பணிப்போம்” என்று அவர் அழைப்பு விடுத்தார்.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
