தென்காசி, பிப். 11:
தென்காசியில் செல்போன் டவர் மீது ஏறி கண்டக்டர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தீயணைப்புத்துறையினர் உதவியுடன் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கீழே இறக்கினர்
தென்காசி அருகே ஆவுடையானூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 25), இவர் செங்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தற்காலிக கண்டக்டராக பணிபுரிந்து வந்துள் னார்.
இவருக்கு வேலை ஒதுக்கீடு செய்ய மறுப்பதாக கலெக்டருக்கு மனு அளித்திருந்தார் ஆனால் அந்த மனுவிற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் ராம்குமாரின் நடத்துனர் உரிமத்தை செங்கோட்டை போக்குவரத்து கழக அதிகாரி தர மறுப்பதாகவும் 3 மாதங்க ளாக நடத்துனர் உரிமம் வழங்காமலும், பணி ஒதுக்காமலும் உள்ள செங் கோட்டை போக்குவரத்து கழக அதிகாரியை கண்டித்து நேற்று மதியம் தென் காசி தாலுகா அலுவலகம் மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பி னர் அலுவலகம் அருகில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி நின்று ராம்குமார் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர் மதியம் 12 மணியளவில் டவர் மீது ஏறிய ராம்குமாருடன் சுமார் மூன்று மணி நேரமாக டிஎஸ்பி மீனாட் சிசுந்தரம், சப்-இன்ஸ் பெக்டர் முருகேஸ்வரி தலைமையிலான போலிசார் மற்றும் மாவட்ட தீய ணைப்பு அலுவலர் பானு பிரியா, மாவட்ட உதவி அலுவலர் சுரேஷ் ஆனந்த், சிறப்பு நிலைய அலுவலர் ஜெயரத்தினகுமார், வீரர்கள் ஜெயபிரகாஷ் பாபு, ராஜ்குமார். சிவக்குமார். விஸ்வநாதன், சுந்தர் ஆகி யோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவரது கோரிக்கைகள் மீது உரிய நடவடிககை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அப்போது அவர் 5 தூக்க மாத்திரை உட்கொண்ட தாகவும், அதனால் டவர் மீது இருந்து தனியாக கீழே இறங்கி வர இயலாது என்றும் தெரிவித்தார்.
இதனால் தீயணைப்பு வீரர்கள் மேலே சென்று அவரை பாதுகாப்பாக கயிறு கட்டி கீழே அழைத்து வந்தனர் பின்னர் 108 ஆம் புலன்ஸ் வாகனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இவர் ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத் திற்கு ஆதரவாக இதே போன்று செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் நேற்று தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.