Headlines

விழுப்புரம் மாவட்டம் தாயனூர் ஊராட்சியில் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி.

விழுப்புரம் மாவட்டம் தாயனூர் ஊராட்சியில் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

விழுப்புரம் மாவட்டம் மலையனூர் ஊராட்சி ஒன்றியம் தாயனூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் அரசி ன் சாதனைகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புகைப்படகள் கண்காட்சி நடைபெற்றது.

புகைப்படக் கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொறுப்பேற்று முதல் பணியாக ஐந்து முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டு நடைமுறைப்படுத்திய திட்டங்களான அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் நிதி உதவி ரூ.4.000/, வழங்கும் திட்டம் விடியல்பயணத் திட்டம் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து புகைப்படங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இடம் பெற்றிருந்தன.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் மக்களை தேடி மருத்துவம் இல்லம் தேடி க் கல்வி திட்டம் முதலமைச்சர் காலை உணவு திட்டம் புதுமைப்பெண் திட்டம் தமிழ் ப்புதல்வன் திட்டம் மகளிர் உரிமை தொகை திட்டம் ஆய்வில் முதலமைச்சர் திட்டம் மக்களுடன் முதல்வர் திட்டம் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்டங்கள் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான திட்டங்கள் முதல்வரின் கனமழை மற்றும் வெள்ள மீட்பு பணி ஆய்வு புகைப்படங்கள் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்ததை தாயனூர் ஊராட்சியினெச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அந்தோணிசாமி

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *