திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி மூர்த்தி (வயது 55).இவருக்கு திருமணம் ஆகி நீண்ட நாட்களாகியும் குழந்தை இல்லைத நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டதால், அதன் பின்னர் ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வந்துள்ளார்.
தற்போது13 வயதான சிறுமி அதே கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் மூர்த்தி தன்னுடைய வளர்ப்பு மகள் என்றும் பாராமல் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது. மேலும் இதை வெளியே யாரும் சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளார். சிறுமியின் நடவடிக்கை, மாற்றங்களை கண்ட அக்கம் பக்கத்தினர் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது, இது குறித்து தகவல் அறிந்த குழந்தைகள் நல அலுவலர் சாதனா வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் மூர்த்தியை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
