திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மழையில் பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குருமலை குழிப்பட்டி ,துணியால் பகுதியில் கனமழை பெய்த காரணத்தால் இன்று இரவு 7:30 மணி பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் அடிவாரம் பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலை காற்றாற்று வெள்ளம் சூழ்ந்தது இதற்கிடையில் இரவு நேரம் என்பதால் பக்தர்கள் யாரும் கோவிலில் இல்லை எனவும், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கோவில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும் கோவில் பணியாளர்கள் தற்சமயம் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர் என கோவில் செயல் அலுவலர் அமரநாதன் தெரிவித்தார்.
உடுமலை : நிருபர்: மணி