உடுமலை, அக் – 28.
உடுமலை ஜெய்லானி நகரில் குடியிருப்பு பகுதியில் ஆமை ஒன்று புகுந்தது. இதனை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர் உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக உடுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு பகுதியில் புகுந்த ஆமையை உயிருடன் பிடித்து உடுமலை வனத்துறை ஊழியர் காளிமுத்து வசம் ஒப்படைத்தனர்.
