தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரங்குன்றாபுரத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 285 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினையும் வருகைப் பதிவேட்டினையும், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், இ.சேவை மையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு அலுவலகத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும். தென்காசி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதிரூ10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய நியாய விலைக்கடை கட்டிடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, அச்சன்குட்டம் ஊராட்சி லெஷ்மிபுரத்தில் நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பாமாயில், சீனி, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்புகளையும். தரத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கோப்பினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும். திடக்கழிவு மேலாண்மையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், கிராம நிர்வாக அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும். 15 வது நிதிக்குழு மானியத்திட்டம் 2024 2025 இன் கீழ் 36 ஆயிரம் மதிப்பீட்டில் இந்திரா காந்தி தெருவில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையினையும், ஊரக வீடு பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ் பழுது பார்க்கப்பட்டுள்ள வீடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், கருவந்தா ஊராட்சி சோலைசேரி கிராமத்தில் T.D.T.A நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளின் கல்வித்திறன் குறித்தும். அடிப்படை வசதிகள் குறித்தும், மதிய உணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவின் தரத்தினையும், மாணவ, மாணவியர்களின் வருகைப்பதிவேடு குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டும். ஊராட்சிமன்ற அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், பைப்லைன் அமைக்கப்படும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும். நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பாமாயில், சீனி, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்புகளையும், தரத்தினையும், ஊத்துமலை கிராமத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு மருந்துகளின் இருப்புகள் மற்றும் வருகைப்பதிவேடுகள் குறித்தும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல் கிஷோர், இ.ஆ.ப, அவர்கள் ஆய்வு செய்து பின்னர் தெரிவித்ததாவது.
அனைத்து திட்டங்களும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, இன்று முழுவதும் வீரகேரளம்புதூர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு அலுவலகங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படுவதோடு, வீரகேரளம்புதூர் வட்டம் மற்றும் கிராமத்தில் உள்ள சேனைத்தலைவர் திருமண மண்டபத்தில் வைத்து பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு முறையான கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் 61000 மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்ணான்டோ,
தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் சுடலைமணி, வீரகேரளம்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கல்யாண ராமசுப்பிரமணியன். அலிஸ் தாயம்மாள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.