திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு தூவானம் காந்தளூர் பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு முதல் தற்போது கனமழை பெய்து வருகின்றது இந்த நிலையில் தற்சமயம் இன்று காலை 6 மணி நிலவரப்படி அமராவதி அணைக்கு நீர்வரத்து 11522 கன அடிக்கு மேல் உள்ள நிலையில் தற்பொழுது அணையின் பாதுகாப்பு கருதி அணையின் பிரதான மதகுகள் வழியாக 11375 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.
மேலும் கரையோர கிராமங்களான கல்லாபுரம் கொழுமம் ருத்ராபாளையம் மடத்துக்குளம் காரத்தொழவு உட்பட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மேலும் அமராவதி அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுப்பணித்து அதிகாரிகள் சுழற்சி முறைகள் தீவிரமாக கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் அமராவதி அணையின் மொத்த 90 அடியில் தற்பொழுது 87. 50 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
உடுமலை நிருபர்: மணி