திருநெல்வேலி,நவ.17:-தநிவேதா பிரியதர்ஷினி [வயது. 32].திருமணம் ஆன இவர், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, பாளையங்கோட்டை உள்ள ஏனாதி நைனார் தெருவில், குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவருடைய கணவர், தனியார் கல்லூரி ஒன்றில் பணியற்றி வருக்கிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர், நெல்லை மாவட்டம் “வீரவநல்லூர்” பகுதியில் உள்ள, “தமிழ்நாடு கிராம வங்கி” யில், அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் பணிக்காக, கடந்த 12.11. 2024 அன்று, தனது இருசக்கர வாகனத்தில் வீரவநல்லூருக்கு, சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு, இவருடைய தலையில் “பலத்த காயம்” உண்டாகியது. உடனடியாக இவர், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதல் உதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அன்றே [12 /11 /2024] திருநெல்வேலி “அரசு” மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்பு அன்றே , அவரின் குடும்பதினரின் விருப்பத்தில், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டர். பின்பு உடல்நிலையில், எந்தவித முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால், 16 .11 .2024 அன்று திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக, தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, மூளையின் செயல்பாடுகளை கண்டறியும், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில், மூளைச்சாவு அடைந்திருப்பது, தெரிய வந்தது. இது குறித்து, அவருடைய உறவினர்களிடம், மருத்துவர்கள் தெளிவாக எடுத்துரைத்தனர். இதன் பின்பு, தாமாகவே முன்வந்து, அவருடைய உறவினர்கள், பிரியதர்சினியின் உடல் உறுப்புகளை, தானம் செய்ய முன்வந்தனர். அதன்படி, கல்லீரல், சிறுநீரகங்கள் ஆகியன, இன்று 17.11.2024, தானமாக பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து “உடற்கூறாய்வு” செய்யப்பட்டு, அவரது உடலுக்கு “மலர் மாலை” வைத்து, “மரியாதை” செய்யப்பட்ட பின்னர், அவருடைய உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்