அக்டோபர் : 23-திண்டுக்கல் மாவட்டம் பழனி முல்லை நகரில் வசித்து வருபவர் இளங்குமரன். பழனியில் எலக்ட்ரிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ரேணுகாதேவி மேல்கரைபட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை ஆக பணியாற்றி வருகிறார்.
இவரது மகள் தேன்மலர் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மகன் வினித் கோயம்புத்தூரில் உள்ள சாப்ட்வேர் இஞ்சினியராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் வீட்டிலிருந்த இளங்குமரன், அவரது மனைவி ரேணுகாதேவி மற்றும் மகள் தேன் மலர் ஆகிய மூவரும் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால், அருகில்உள்ள வீட்டில் இருந்தவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உள்ளனர். அப்போது தொலைபேசியை யாரும் எடுக்காததால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மூவரும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தாய் ரேணுகாதேவி மகள் தேன் மலர் ஆகிய இருவரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும், தந்தை இளங்குமரன் தூக்கில் தொங்கிய நிலையிலும் உயிரிழந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இளங்குமரன் மனைவி மற்றும் மகளின் கழுத்தை அறுத்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
பழனி செய்தியாளர் நா.ராஜாமணி