திருநெல்வேலி, அக். 2:-
மகாத்மா காந்தியடிகள், திருநெல்வலி டவணில், “தேசபக்தர்” சாவடி கூத்த நயினார் பிள்ளை இல்லத்தில் அரிஜன,புனித யாத்திரை நிகழ்வின் போது, 1934 -ஆம் வருடம் ஜனவரிமாதம் 23,24 ஆகிய இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். அவர்களின் விருந்தோம்பலில் மகிழ்ந்து, கூட ஒரு நாள் தங்கினார். நெல்லையில், காந்தியடிகள் தங்கியிருந்து மகிழ்ந்த அந்த இல்லத்தில், அவர் தங்கியிருந்த அறை புனிதமாக கருதப்பட்டு, இனறும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த புனித அறையில், மகாத்மா காந்தியின் 157-வது பிறந்த நாள் விழா, இன்று ( அக்டோபர். 2) நடைபெற்றது.
நிகழ்வில், காந்தி வந்து 3 நாள் தங்கியிருந்த இல்லத்தைச் சேர்ந்த காந்திமதியம்மாள், கலந்துகொண்டார். மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்திற்கு வ.உ.சி. இலக்கிய மாமன்ற துணைத்தலைவர் மு.அ. நசீர்,பாரதியார் உலக பொது சேவை நிதிய பொதுச் செயலாளர் “முனைவர்” கோ.கணபதி சுப்பிரமணியன், திருவள்ளுவர்பேரவைஅமைப்பாளர் “தூய தமிழ் பற்றாளர் விருது” பெற்ற கவிஞர் ந.ஜெயபாலன் ஆகியோர், மலர்மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.வருகை தந்தவர்களை, தேசபக்தர் சாவடி கூத்த நயினார் பிள்ளையின் பேரன் கூத்தநயினார் என்ற, செந்தில் வரவேற்றார்.
நிகழ்வில், சிவப்பிரகாசர்நற்பணி மன்ற துணைச் செயலாளர் சு.முத்துசாமி, அரசு அதிகாரி காந்திமதி வேலன், அகவை முதிர்ந்த தமிழறிஞர் சங்க, மாநிலத்தலைவர் கவிஞர்.சுப்பையா, நெல்லை மீனாட்சிபுரம் கிளை நூலகர் அகிலன் முத்துகுமார், வாசகர் வட்டத்தலைவர் சரவண குமார்,ம.தி.தா.இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சோமசுந்தரம்,வாசுகி வளர்கல்வி மன்ற துணைச் செயலாளர் “அகரம்” தளவாய், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய செயற்குழு உறுப்பினர் கவிஞர் புன்னை செழியன், “தூய தமிழ் பற்றாளர் விருது” பெற்ற சிவ செல்வம் மாரிமுத்து ஆகியோர், கலந்துகொண்டு மகாத்மா காந்தியின் போராட்ட நெறி, கொள்கைகள், பெருமைகளை பேசினர்.
தொடர்ந்து மகாத்மாகாந்தி, வள்ளலார் ஆகியோரின் புகழை, தொடர்ந்து பரப்பி வந்த தொழிலதிபர் “பொள்ளாச்சி” நா. மகாலிங்கத்தின் “நினைவேந்தல்” நிகழ்வு நடைபெற்றது. பொள்ளாச்சி நா. மகாலிங்கம் ஆற்றிய ஆன்மீகப் பணி, பதிப்பகப் பணி, சமுதாயப் பணி ஆகியவை பற்றி, கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் உரையாற்றினார். நிறைவாக “தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி” எடுக்கப்பட்டது. தேசபக்தர்.சாவடி.கூத்த நயினார்பிள்ளை பேத்தி ராஜேஸ்வரி, சாவடி நமச்சிவாயம் ஆகியோர், “நன்றி” கூறினர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
