உடுமலை டிச2-திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் துணை முதல் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி ராமச்சந்திராபுரத்தில் ரேக்ளா ரேஸ் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் இல. பத்மநாபன் தலைமை தாங்கினார். குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அணி கடவு கிரி முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி 200 மீட்டர் தொலைவிற்கான பந்தயத்தை கொடியசைத்து வைத்தார். 200 மீட்டர் 300 மீட்டர் என இரு பந்தய தொலைவுகளில் நடத்தப்பட்ட இந்த ரேசில் திருப்பூர் உடுமலை, குடிமங்கலம், பொள்ளாச்சி, மடத்துக்குளம், பழனி, கிணத்துக்கடவு, தாராபுரம் ,திண்டுக்கல், என பல்வேறு ஊர்களில் இருந்து 700 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன் குடிமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம் தலைமை செயற்குழு உறுப்பினர் ஷியாம் பிரசாத், மாவட்ட விவசாயஅணி அமைப்பாளர் மூங்கில் தொழுவு ரகுபதி, தலைமை மாவட்ட மகளிர் அணி நிர்வாகி அனிதா செல்வராஜ் பொதுக்குழு உறுப்பினர்கள் பாபு, பருவதவர்ஷினி, ஒன்றிய கவுன்சிலர் கவிதா கிரி, ஊராட்சி மன்ற தலைவர் அழகம்மாள் மற்றும் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் கிளைகழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளுக்கும் அமைச்சர் மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர்கள் பைக், மற்றும் தங்க நாணயங்களை பரிசுகளாக வழங்கினர்.
உடுமலை : நிருபர் : மணி