உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட மத்திய பஸ் நிலையத்தின் அருகே புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.நகராட்சி நூற்றாண்டு விழாவை யொட்டி ரூ 3 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இந்த பணிகள் முழுமையாக நிறைவு அடையாமல் நிலுவையில் உள்ளது.
ஆண்டுகள் பல கடந்தும் ஆமை வேகத்தில் பணி நடைபெற்று வருவதால் தற்போது உள்ள பஸ் நிலையத்தில் கடும் போக்குவரத்து.
நெரிசல் நிலவி வருகிறது.இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், போக்குவரத்து நெரிசலை குறைத்து பாதுகாப்பு மற்றும் பயணத்தை எளிதாக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அணிகள் ஆரம்பிக்கப்பட்டது.ஆனால் அதில் அதிகாரிகள் முழு கவனம் செலுத்தி முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் கட்டிடம் கட்டப்பட்டு வருவதற்கான நோக்கமும் வீணாகி வருகிறது.அத்துடன் போதிய பராமரிப்பின்மை காரணமாக திறப்பு விழா காண்பதற்கு முன்பே சேதமடையும் வாய்ப்புகளும் உள்ளது.எனவே உடுமலையில் நடைபெற்று வரும் புதிய பஸ் நிலைய பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தனர்.
உடுமலை : நிருபர்: மணி