திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் தேஜஸ் ரோட்டரி கோவை கே எம் சி ஹெச் சார்பில் இலவச மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை முகாம் 6-02-2026 காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது..

கிராமப்புற பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் , புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதை தடுக்கும் வகையிலும் இந்த இலவச பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது..
இது குறித்து மருத்துவர்கள் கூறும் போது –
நகர்ப்புற பெண்கள் அவ்வப்போது விழிப்புணர்வுடன் பரிசோதனை மேற்கொள்வதால் புற்றுநோயின் ஆரம்ப நிலையிலேயே பாதுகாக்கப்பட்டு மீட்கப்படுகின்றனர்..
ஆனால் கிராமப்புற பெண்கள் சாதாரண மார்பு வலி என நினைத்து கைமுறை வைத்தியங்கள் செய்து புற்றுநோய் நான்காவது நிலையை அடையும் வரை அறியாமலேயே இருந்து , அதன் பின் குணப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு மரணத்தை தழுவுகின்றனர்…. எனவே கிராமப்புற பெண்களுக்காக இந்த இலவச பரிசோதனை முகாம் செயல்படுத்தப்படுவதாகவும் , பரிசோதனை மேற்கொள்ள விரும்பும் கிராமப்புற பெண்கள் அந்தந்த பகுதி அரசு மருத்துவமனை, செவிலியர்கள் மற்றும் சுகாதாரத் துறையினரை தொடர்பு கொண்டால் அவர்களுக்கும் இலவச பரிசோதனை மேற்கொள்ள விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புற்றுநோய் கண்டறியப்படும் பட்சத்தில் கே எம் சி ஹெச் மருத்துவமனையில் இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்..
இந்த முகாமில் மடத்துக்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அருணா குமாரி, அகிலா ,ஜோதிமணி கே எம் சி ஹெச் சார்பில் ரோட்டேரியன்கள் டாக்டர் சுந்தர்ராஜன், டாக்டர் வித்யா லட்சுமி, லோகேஸ்வரி, சக்கரபாணி சத்தியம் பாபு, போதிராஜ் குருசாமி, எஸ் எம் நாகராஜ் மற்றும் மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.. சுமார் 37 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது..
