கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டிற்கு உட்பட்ட உப்புமண்டி பகுதியில் ரூ30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நவீன பொது கழிப்பிடம் கட்டும் பணியினை மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிச்செல்வன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் உதவி பொறியாளர் மரகதம், சுகாதார ஆய்வாளர் தனபால், வார்டு செயலாளர் நா.தங்கவேலன், பகுதி துணை செயலாளர் என்.ஜெ.முருகேசன், மற்றும் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.