திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வனத்துறை அலுவலகம் சார்பில் வனச்சரக அலுவலர் பாபு தலைமையில் நடைபெற்ற பசுமை போக்குவரத்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஆம்பூர் பைபாஸ் சாலையில் தொடங்கிய பேரணியில் கே.ஏ.ஆர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மற்றும், வனத்துறையினர் வருவாய்த்துறையினர், காவல் துறையினர் என 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேவலாபுரம், எல்.மாங்குப்பம், வானக்காரதோப்பு, பஜார் ,உமர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு பசுமை போக்குவரத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் வட்டாட்சியர் ரேவதி, நகர காவல் ஆய்வாளர் ரமேஷ் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராஜமன்னன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.