Headlines

வாணியம்பாடியில் ஆலயத்திற்கு சொந்தமான கடையை காலி செய்யக் கூறியதால் வாடகை தாரார் குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.

வாணியம்பாடியில் ஆலயத்திற்கு சொந்தமான கடையை காலி செய்யக் கூறியதால் வாடகை தாரார் குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.

வாணியம்பாடி,நவ.21- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சி.எல். சாலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்திற்கு சொந்தமான ஆலய வளாகத்தில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

இதில் வாடகைக்கு இருக்கும் ஒரு நபர் தன்னுடைய கடையை நிர்வாகத்தினர் கடந்த ஆறு மாதமாக காலி செய்ய கூறுவதாகவும் தான் தொடர்ந்து வாடகை செலுத்தி வரும் நிலையில் தன்னால் காலி செய்ய இயலாது என்று கூறி குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல் துறையினர் நிர்வாகத்துடன் ஏற்படும் பிரச்சனைக்கு சாலையில் அமர்ந்து பொதுமக்களுக்கு இடையூறாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் போராடக்கூடாது என அறிவுறுத்தி மறியலை கைவிடுமாறு வலியுறுத்தினர்.

இதனை ஏற்காது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உங்களிடம் பேச முடியாது, உங்கள் உயர் அதிகாரிகளை வரச் சொல்லுங்கள், உங்களிடம் என்னால் பேச முடியாது நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சனையை நீங்கள் தீர்த்து வைத்தால் மட்டுமே என்னால் போராட்டத்தை கைவிட முடியும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியலை தொடர்ந்ததால் அரைமணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மறியலை கைவிடவில்லை என்றால் கைது செய்ய நேரிடும் என எச்சரித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

நிருபர் அப்சர் மர்வான்
திருப்பத்தூர் மாவட்டம்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *