மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஜெயில் காளியம்மன் கோயிலில் மார்கழி அமாவாசையை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் மிகுந்த பக்தி உணர்வுடன் நடைபெற்றது.

அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக வந்து அம்மன் தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.
பூசாரிகளால் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
கோவில் முழுவதும் பஜனை, தீப ஒளி ஆகியவை ஆன்மிகச் சூழலை இன்னும் மேம்படுத்தின.
பூஜைகள் முடிந்த பின்னர், பக்தர்களுக்காக அன்னதான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டன.
வியாபாரிகள் குமார், ராஜா, ஜெய்குமார், பூசாரி சக்தி வேல், மற்றும் அசோக் குமார் ஆகியோர் சார்பில் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டு சேவையின் பயனை பெற்றனர்.
மார்கழி அமாவாசை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஆன்மிக விழா பக்தர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
