செப் 23, கன்னியாகுமரி –
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக விடியல் பத்திரிகையின் மாவட்ட புகைப்படக் கலைஞர் ஜெனீர் அவர்கள் இன்று காலை மனிதாபிமானச் சேவையாக குருதி கொடை வழங்கினார்.
குருதி தானம் என்பது உயிரைக் காப்பாற்றும் அரிய பணியாக கருதப்படுகிறது.
இதனை முன்னிட்டு, “ஒருவரின் குருதி, பலரின் உயிருக்கு நம்பிக்கையாக அமைகிறது.
இத்தகைய பணியில் பங்கு பெறுவது ஒரு மனிதனின் சமூகப் பொறுப்பு” என்று ஜெனீர் அவர்கள் தெரிவித்தார்.
பொதுமக்கள் சமூக நலனுக்காக முன்வந்து குருதி தானத்தில் ஈடுபட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இச்செயலில் கலந்து கொண்ட உள்ளூர் நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஜெனீர் அவர்களின் சேவையை பாராட்டினர்.
குமரி மாவட்ட செய்தியாளர் – பாவலர் ரியாஸ்.
