ஆக் 03 கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 50 பேரூராட்சிகளில் கடந்த ஜூன் 16, 17, 20 தேதிகளில் நடைபெற்ற ஒப்பந்தங்களில் பெரும் முறைகேடு இடம்பெற்றதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஐ (எம்-எல்) ரெட்ஸ்டார் மற்றும் தோழமை இயக்கங்கள் இணைந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
அதிகாரிகளுக்கு கமிஷன் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில், செயற்பொறியாளர் தனிப்பட்ட முறையில் புதிய ஆணையை பிறப்பித்து, ஒப்பந்த பணிகளை ‘பேக்கேஜ் சிப்பங்களாக’ சேர்த்து, கமிஷன் வழங்கிய ஒப்பந்தக்காரர்களுக்கே பணிகளை வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சட்டவிரோத நிபந்தனை ஒப்பந்த புள்ளி அறிவிப்பில், தேவையில்லாத “தளவாட சாமான்கள் வேலை நிலைமைகள் சான்றிதழ்” (Good Working/Operational condition Certificate) திருநெல்வேலி மண்டல செயற்பொறியாளர் மூலம் பெற வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனை விதிக்கப்பட்டது. இது, 1998 வெளிப்படை தன்மை ஒப்பந்த புள்ளி சட்டத்திற்கும் 2000 திருத்த சட்டத்திற்கும் புறம்பானது என்றும் கூறப்படுகிறது.
போலியான சான்றுகள் – தரமற்ற பணி பணிகளைச் செய்ய தேவையான தளவாட சாமான்கள் இல்லாத ஒப்பந்தக்காரர்களுக்கும் போலியான சான்றுகள் வழங்கி வேலை உத்தரவு வழங்கப்பட்டதாகவும், மதிப்பீடுகளை வீணாக உயர்த்தி அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உதாரணமாக, இரணியல் பேரூராட்சி 7-வது வார்டில் நடைபெற்ற சிமெண்ட் தளம் அமைக்கும் பணி, தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சருக்கு தபால் இந்த முறைகேட்டை எதிர்த்து, சிறப்பு விசாரணைக் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஐ (எம்-எல்) ரெட்ஸ்டார் மற்றும் தோழமை இயக்கங்கள் சார்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு மாவட்ட செயலாளர் அல் காலித் தலைமையில் தபால் மூலம் மனு அனுப்பப்பட்டது.
கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட தமிழக விடியல் நிருபர் பாவலர் ரியாஸ்.
