விழுப்புரம் நவ-27 :
ஒன்றிய அரசின் எஸ்.ஐ.ஆர் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி முஸ்லிம் மக்கள் கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை அன்று விழுப்புரம் தனியார் திருமண மண்டப மினி ஹாலில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாநில இளைஞரணி தலைவர் வி.விக்ரம் தலைமையேற்றார். வரவேற்புரையை விழுப்புரம் நகர செயலாளர் சி. சுஹைல் முஹம்மது வழங்கினார்.
அ. மதினா, ஜை. ஆயிஷா பேகம், தேவகி, சு. அமிதா, பா. ஷாகிரா பானு, சு. பாத்திமா, இ. ஆயிஷா, இ. ஷர்மீளா உள்ளிட்டோர் முன்னிலையில் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக முஸ்லிம் மக்கள் கழகத்தின் தலைவர் முனைவர் ச. சு. ஜைனுதீன், விழுப்புரம் மாவட்ட தலைவர் ஜா. ஷோகத் அலி, திராவிட கழக ச. பழனிவேல், மு. ஆரியசாமி, செஞ்சி தொகுதி பிரபு, முஸ்லிம் மக்கள் கழகத்தின் பா. அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். கூட்ட நிறைவில் காணை ஒன்றிய தலைவர் ஆ. மணிகண்டன் நன்றி கூறினார்.
மேலும் இக்கூட்டத்தில் மூன்று திருமணங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தீர்மானம் – 1 தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் நடைமுறை வாக்காளர் பட்டியலில் குழப்பத்தை ஏற்படுத்தி ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறது என்ற கருத்து கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் தொடரும் வழக்கை ஆதரிப்பதாகவும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஏற்படும் குற்றப்பரம்பரைகளை கண்டிப்பதாகவும் முஸ்லிம் மக்கள் கழகம் தெரிவித்தது.
தீர்மானம் – 2 எஸ்.ஐ.ஆர் நடைமுறை பொதுமக்களுக்கு தேவையற்ற அச்சம் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது எனவும், தேர்தல் ஆணையம் அலட்சியமாக நடந்து கொள்கிறது எனவும் குற்றம்சாட்டப்பட்டு, எஸ்.ஐ.ஆர்-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென கூட்டம் தீர்மானித்தது.
தீர்மானம் – 3 திண்டிவனத்தில் உள்ள ஆதார் மையங்களில் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. புதிய ஆதார் பதிவு, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே திண்டிவனத்தில் ஒரு ஒருங்கிணைந்த ஆதார் மையம் அமைக்க மாநில, ஒன்றிய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
