திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காந்தி சிலை அருகே தமிழகத்தில் பெருகிவரும் பாலியல் சீண்டல், போதை பொருள் நடமாட்டம், சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்ட அதிமுக மற்றும் விழுப்புரம் மாவட்ட மகளிரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் சி.வி சண்முகம் எம்பி தலைமையில் நடைபெற்றது.
நகர செயலாளர் தீனதயாளன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி செல்லபெருமாள் ஆகியோர் துவக்க உரையாற்றினர்.
மேலும் இதில் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன், வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, கழக அமைப்புச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன், மாநில நிர்வாகிகள் பாலசுந்தரம், ஏழுமலை, சிவன், மாவட்ட நிர்வாகிகள் கண்ணன், வெங்கடேசன், ஆனந்தி அண்ணாதுரை, நாகம்மாள், மல்லிகா, ஜெயபிரகாஷ்,டி.கே.குமார், செல்லபெருமாள், டாக்டர் கோகுல்கிருஷ்ணராஜ், பிரித்திவிராஜ், சக்திவேல், முருகன், கோகுல்ராஜ், நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ், கணேசன், ஒன்றிய கழக செயலாளர்கள் ரவிவர்மன், நடராஜன், ஒலக்கூர் பன்னீர், சுரேஷ்பாபு, பேட்டை முருகன், ராமதாஸ், கண்ணன், சேகரன், விநாயகமூர்த்தி, நடராஜன், கிருஷ்ணமூர்த்தி, அதிமுக நிர்வாகிகள் தேவநாதன், தளபதி ரவி ,ரூபன்ராஜ், உதயகுமார், ஜெயஸ்ரீ செல்வகுமார் உள்ளிட்ட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, சார்பணி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷமிட்டனர்.
