தமிழ்நாடு துணை முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின் 48-வது பிறந்தநாளை முன்னிட்டு, திருநெல்வேலி டவுண், ஜவகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திருநெல்வேலி மாவட்ட, திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அருள்வின் ரொட்ரிக்கோ ஏற்பாட்டில், நடைபெற்றது.
பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி, வாழ்த்தி பேசினார்.
விழாவில், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ, திருநெல்வேலி மண்டல வார்டுக்குழு சேர்மன் செ.மகேசுவரி, மாநகராட்சி கவுன்சிலர்கள் உலகநாதன், ரவீந்தர், சுப்பிரமணியன், மன்சூர், மாரியப்பன், நெல்லை பேட்டை பகுதி திமுக துணை செயலாளர் சுபுஹானி, தகவல் தொழில்நுட்ப அணி, மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் காசிமணி, திமுக நிர்வாகிகள் “பேட்டை” தி.மு.கனி, “டவுண்” அருள், காசிலெப்பை புகாரி, மீன்கனி, சேகுபிள்ளை, “பேட்டை” செல்வம் உள்ளிட்ட மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட திமுக நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.