திருநெல்வேலி,அக்.16:-
திருநெல்வேலி, சிவப்பிரகாசர் நற்பணி மன்றம் மற்றும் வேணுவனம் ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து, பாளையங்கோட்டை மகாராஜா நகர், “புனித அன்னாள்” மனவளர்ச்சிக் குன்றியோர் இல்லம் மற்றும் ஆதரவற்ற முதியோர் இல்லம் ஆகிய இடங்களில், “மகிழ்வித்து மகிழ்வோம்!”-என்னும், தீபாவளி சிறப்பு விழாவினை, நடத்தின.
அதன் ஒருபகுதியாக, இந்த இல்லங்களில் உள்ளவர்களுக்கு, விலையில்லா புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் ஆகியவற்றை வழங்கி, தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்து, மகிழ்ச்சி அடைந்தனர்.
நிகழ்விற்கு, “மூத்த வழக்கறிஞர்” கே.ஜெயபாலன் தலைமை வகித்தார். “கலை பதிப்பகம்” ஆசிரியர் கவிஞர்.”பாப்பாக்குடி” இரா.செல்வமணி, தமிழ்நாடு அரசின் “நல்லாசிரியர்” விருது பெற்றுள்ள ஹெச்.நடராஜன் ஆகியோர், முன்னிலை வகித்தனர்.வருகை தந்த அனைவரையும், சிவப்பிரகாசர் நற்பணி மன்ற செயலாளரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான “கவிஞர்” கோ.கணபதி சுப்பிரமணியன், வரவேற்றுப் பேசினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக வ.உ.சி.இலக்கிய மாமன்றத் துணைத் தலைவர் மு.அ.நசீர், சிவப்பிரகாசர் நற்பணி மன்றத் துணைச்செயலாளர் சு.முத்துசாமி,தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் செயற்குழு உறுப்பினர் புன்னைச் செழியன், தனியார் மருத்துவக் கல்லூரி 3-ஆம் ஆண்டு மாணவர் நிதிஷ் கண்ணா ஆகியோர் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் உணவு ஆகியவற்றை வழங்கினர். விழா நிறைவில், “அருட்சகோதரி” சுசீலா மேரி, அனைவருக்கும் நன்றி கூறினார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் – “மேலப்பாளையம்” ஹஸன்.
