தமிழக முதல்வர் தளபதியார் அவர்களின் சமூக சிந்தனையுடன் கூடிய சமதர்ம சமத்துவப் பொங்கல் ரங்கப்பனூர் ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் (10/01/2025) காலை 12 மணியளவில் ஊராட்சி மன்ற தலைவர் R.M.S.K #அர்ச்சனாகாமராஜன் அவர்களின் தலைமையிலும் கழக நிர்வாகிகள் முன்னிலையிலும் சிறப்பு விருந்தினராக சங்கராபுரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் B.N.R.அசோக்குமார் அவர்கள் கலந்து கொண்டு சமத்துவப் பொங்கல் விழாக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர் அஸ்வினி செந்தில் குமார் அவர்களும் மற்றும் ஒன்றிய பொருளாளர் நலத்தம்பி ஒன்றிய கவுன்சிலர் ரீனா சரவணன் ஒன்றிய மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டு தளபதியாரின் சாதனைகளையும் அந்த சாதனையை நிறைவேற்றி தந்த எங்கள் குடும்பத் தலைவர் ஆருயிர் அண்ணன் #வசந்தம்க_கார்த்திகேயன் B.Sc..MLA அவர்களின் வழிகாட்டுதலின் படி இன்று எங்கள் ரங்கப்பனூர் ஊராட்சியில் பணிபுரியும் பணியாளர்கள் தமிழக முதல்வரின் சாதனைகளை ஒவ்வொன்றாக எடுத்து உரையாற்றினார்கள்.
மேலும் ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கணினி உதவியாளர் பணித்தளப் பொறுப்பாளர்கள் தூய்மைக் காவலர்கள் தூய்மைப் பணியாளர்கள் OHT இயக்குநர்கள், அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளுக்கு புத்தாடை மற்றும் பொங்கல் பரிசு அளித்து பொங்கல் விழாக் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் அரசு ஒப்பந்ததாரர் அருணகிரி ரிஷி கன்ஸ்ட்ரக்க்ஷன் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தார் முடிவில் ஊராட்சி செயலர் திருமால்வளவன் நன்றி கூறினார்.