செப் 9 கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் கதிர் சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கருவிகள் ஏற்கனவே மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ளன.
கதிர்வீச்சு பொருட்கள் மும்பையில் இருந்து வரவுள்ளன.
இவ்வருட இறுதிக்குள் சிகிச்சை மையம் செயல்படத் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் மாவட்ட மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை அருகிலேயே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
