நீலகிரி மாவட்டத்தில் 1993 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி காலத்தில் முதன்மை திட்டத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட கட்டிடங்கள் கட்டுமான வரை விதி சட்டத்தின் மூலமாக நீலகிரி மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் கட்டிடங்களுக்கு அனுமதி பெற மிகக் கடினமான விதிமுறைகள் இருந்ததின் காரணமாக மாவட்டம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அனுமதி பெறாமல் பொதுமக்கள் கஷ்டப்படுகின்றனர்.
இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாண்புமிகு திராவிட மாடல் ஆட்சிநாயகர் தமிழ்நாடு முதல்வர் தளபதியார் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் ஆலோசனைக்கிணங்க, இன்று(8.09.2025) மாண்புமிகு தமிழ்நாடு அரசு தலைமை கொறடா திரு.கா ராமச்சந்திரன் அவர்கள்,மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் திரு.முத்துசாமி அவர்களிடம் நேரில் சந்தித்து நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் கட்டிட கட்டுமான வரைவிதி சட்டத்தின் உண்மைத்தன்மையையும்,பொதுமக்களின் கஷ்டங்களையும் எடுத்துக் கூறி இச்சட்டத்தினை தளர்வு செய்து மலை மாவட்டம மக்களுக்கு எளிமையான முறையில் அமைத்து,அனுமதி பெற எழுத்து மூலமாகவும் நேரடியாகவும் கேட்டுக் கொண்டார்.
இக்கோரிக்கையை ஏற்று மாண்புமிகு வீட்டு வசதி துறை அமைச்சர் கூறும் போது- நீலகிரி மக்கள் கோரிக்கை ஏற்று உடனடி தீர்வு காணப்படும், மேலும் அதிகாரிகளுடன் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து மாவட்ட அதிகாரிகளுடனும் மக்களடனும் கலந்துரையாடி விரைந்து தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார்.
இந்நிகழ்வின் போது வீட்டு வசதித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி காகர்லா உஷா இ.ஆ.ப.,அவர்கள் உட்பட அரசுத் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
