உடுமலை, நவ 29-உடுமலை நகராட்சியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த கருத்தடை ஆபரேஷன் செய்யும் பணி துவங்கி உள்ளது. உடுமலை நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன அனைத்து பகுதிகளிலும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெரு நாய்கள் எண்ணிக்கை பெருகி சாலை மற்றும் வீதிகளில் வருவோர் போவோர்களை விரட்டுவதும் கடிப்பதும் தொடர்கிறது இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர். தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் அவைகளுக்கு கருத்துடைய ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்தது இதை அடுத்து உடுமலை நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரு நாய்களைப் பிடிக்கும் பணி துவங்கி உள்ளது
நேற்று தொழிலாளர்கள் வலை வைத்து நாய்களைப் பிடித்து வேனில் அடைத்து ராஜேந்திரா சாலையில் உள்ள முகாமுக்கு கொண்டு சென்றனர் அங்கு நாய்களுக்கு இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது மேலும் வெறி நாய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.
உடுமலை : நிருபர் : மணி