திண்டுக்கல் : டிசம்பர்,01
திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் ஜி நேற்றைய தினம் SIR குறித்து முறைகேடுகள் நடைபெற்றதாகவும் BLO பணியாளர்களை மிரட்டுவதாகவும் செய்திகள் வந்ததைத் தொடர்ந்து தாசில்தாரிடமும் அழைத்து நிலவரத்தை கேட்டறிந்தார் அவர் கூறியது பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மேலும் 11.12.25 கால அவகாசங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிடும்படி 15 ஜனவரி மாதம் வரை பட்டியல் சீர்திருத்தம் நடைபெறும் என்றும் அதைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கேட்டறிய சென்றனர். உடன் திண்டுக்கல் மாவட்ட பொதுச் செயலாளர் சந்திரசேகர், மாவட்ட செயலாளர் கார்த்திகை சாமி, ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் பாலசிந்தன், மற்றும் பிரபாகரன் ஜி, சுரேஷ் ஜி மேலும் பாஜக நிர்வாகிகள் சென்றனர்.
