திருநெல்வேலி,டிச.10:- மனித உரிமைகளுக்கான, உலகளாவிய பிரகடனத்தை, “ஐக்கிய நாடுகள் சபை” 1948- ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 10-ஆம் தேதியில், அங்கீகரித்த.து. அதன் அடிப்படையில், ஆண்டுதோறும் இந்த நாள், சர்வதேச மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், “சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி” யினை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப.கார்த்திகேயன், நெல்லை மாநகராட்சி ஆணையாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான என்.ஓ.சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா ஆகியோர் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், ஒருங்கிணைந்து, எடுத்துக் கொண்டனர். அதாவது, அந்த உறுதிமொழியானது, ” இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தக் கூடிய, பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பட்ட மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றறு உறுதியுடனும் நடந்து கொள்வேன்! என்று உளமார உறுதி மொழிகிறேன். எவ்வித வேறுபாடும் இன்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன். என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை, மீறுகிற எந்தவொரு செயலையும், நேரடியாகவோ- மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன்! என்று, உளமார உறுதி கூறுகிறேன். இவ்வாறு, உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில்,மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் இலக்குவன், உதவி ஆட்சியர் [பயிற்சி] செல்வி அம்பிகா ஜெயின் ஆகியோரும், கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.