Headlines

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி கனியன் குளம் கிராமத்தில், கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி கனியன் குளம் கிராமத்தில், கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி, ஜூலை.2:-

கால்நடைகளுக்கு வாய் மற்றும் கால்களில் ஏற்படும் நோய்களை தடுப்பதற்கான தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை, திருநெல்வேலி புறநகர் மாவட்டம் சேரன்மகாதேவியை அடுத்துள்ள “கனியன்குளம்” கிராமத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.சுகுமார், இன்று [ஜூலை.2] காலையில், துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-” கால்நடைகளுக்கு வாய் மற்றும் கால்களில் உருவாகும் நோய்கள், மிக எளிதில் மற்ற மாடுகளுக்கும், நேரடியாக தொற்றும் தன்மை கொண்டது ஆகும். குறிப்பாக பாதிக்கப்பட்ட மாடுகள் சாப்பிட்டு மீதம் வைத்திருக்கும் தீவனம், தீவனத்தட்டுகள், அவை குடிக்கும் தண்ணீர் மற்றும் இதர உபகரணங்கள் மூலமாகவும், மாடுகளை பராமரிக்கும் மனிதர்கள் மூலமாகவும், மிக விரைவாக அதுவும் காற்றின் மூலமாக எளிதில் பரவும். இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் சிறுநீர் ,பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால், மற்ற கால்நடைகளுக்கும் அதிக அளவில் பரவக்கூடியது என்பதால், இந்த மாதம் [ஜூலை] முடிய, தடுப்பூசியானது நெல்லை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1 லட்சத்து, 41 ஆயிரத்து 800 மாடுகளுக்கும் போடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்!”- இவ்வாறு , மாவட்ட ஆட்சித்தலைவர் தன்னுடைய உரையில் , தெரிவித்தார். மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக நடைபெற்ற இம்முகாமின், துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் டாக்டர் சங்கர நாராயணன், துணை இயக்குநர் டாக்டர் ராஜேசுவரி,நெல்லை ஆவின் நிறுவன பொது மேலாளர் டாக்டர் சரவணமுத்து,துணை பதிவாளர் [பால் வளம்] டாக்டர் சைமன் சார்லஸ் உள்ளாட்சி பிரதிநிதிகள், கால்நடை ஆய்வாளர்கள் உட்பட பலர், கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *