திருநெல்வேலி,ஜன.13:-
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று ( ஜனவரி.13) மாலையில், மாநகர காவல் ஆணையர் “முனைவர்” நெ.மணிவண்ணன் தலைமையில், நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மாநகரில் உள்ள காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் புலன் விசாரணைகள் குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகளின் தன்மை குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது, கடும் நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும், ரவுடிகள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும், பல்வேறு நிகழ்வுகள் குறித்தும், விவாதிக்கப்பட்டன.
மாநகர காவல் துணை ஆணையர்கள் மேற்கு டாக்டர் சி.மதன், கிழக்கு வி. வினோத் சாந்தாராம், தலைமையிடம் எஸ். விஜயகுமார் மற்றும் காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர், இந்த ஆய்வுக்கூட்டத்தில், கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
