உடுமலை : நவம்பர் 01.
தமிழ்நாட்டில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு உடுமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மாநில மற்றும் தேசிய அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் ஆலோசனைக் கூட்டம் உடுமலை ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஆர்டிஒகுமார் தலைமை தாங்கினார்.
இதில் அனைத்து அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர் .அப்போது சிறப்பு பணிகள் தொடர்பான அரசியல் கட்சியினருக்கு ஆர்டிஓ விளக்கம் அளித்தார். பின்னர் அரசியல் கட்சியினர்களுக்கு வாக்குச்சாவடி நிலை முகவர் புதிய படிவம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உடுமலை தாசில்தார் கௌரிசங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
