திருநெல்வேலி,டிச.15:-
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அண்ணா திமுக பொது செயலாளருமான “எடப்பாடி” கே. பழனிச்சாமி, வருகிற 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில், திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, எடப்பாடி பழனிச்சாமிக்காக இன்று ( டிசம்பர்.15) காலையில், சென்னை ராயப்பேட்டையில், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் உள்ள, அதிமுக தலைமை அலுவலகத்தில், திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக பொருளாளருமான, பாராளுமன்ற மேலவை ( ராஜ்ய சபா) முன்னாள் உறுப்பினருமான பி சௌந்தர்ராஜன், அதிமுக துணை பொதுச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களுமானகே பி முனிசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி வேலுமணி, அமைப்பு செயலாளர் தங்கமணி ஆகியோரிடம்,”விருப்ப மனு” சமர்ப்பித்தார்.
அப்போது, ராதாபுரம் தொகுதி அதிமுக முக்கிய பிரமுகர்கள், உடனிருந்தனர்.திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
