மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் திரு மு. க.ஸ்டாலின் அவர்களின் எல்லோருக்கும் எல்லாம் என்கிற திட்டங்களின் அடிப்படையில், கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீ கோபால் நாயுடு உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற குழந்தைகளுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் பள்ளியின் தாளாளர் திரு. ரவி சாம் அவர்களுடன், கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திரு.துரை.செந்தமிழ் செல்வன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் ஆவாரம்பாளையம் பகுதிகழக பொறுப்பாளர் திரு.மோகன்ராஜ், மாமன்ற உறுப்பினர் திருமதி.அம்பிகா தனபால், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.தனபால், முன்னாள் பொறுப்பு குழு உறுப்பினர்திரு. கமல் மனோகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் திரு.க.மணிகண்டன், வட்டக் கழக நிர்வாகிகள் திரு.செந்தில், திரு.சுரேஷ், வேலு, திரு.பூபதி,திரு.கங்குவார்சீனு,திரு.துரை, திரு.அன்பழகன்,திரு.டைட்டஸ்,திரு.சரவணன்,மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட செய்தியாளர்: சம்பத்குமார்
